Saturday, March 17, 2007

அழகிப் போட்டிகள்

அழகிப் போட்டிகள் நடத்துவதை கடுமையாக எதிர்க்கிறேன் நான்। நான்கு நீதிபதிகள் சேர்ந்தால் ஒரு பெண்ணின் அழகின் இலக்கணத்தை எழுதிவிட முடியாது।மேலும் பெண்ணடிமைத்தனத்தின் நவீன வடிவம் இந்த அழகுப் போட்டி। இதற்கு பெண்கள் அமைப்பினரும், பெண்ணியல் வாதியினரும் எப்படி ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.நம் நாட்டில் ஒழிக்க வேண்டிய மூடப் பழக்கவழக்கங்களில் அழகிப் போட்டியும் ஒன்று.

இறைவன் இல்லை

இறைவன் இல்லை
ஆனால் இருக்கிறான்

இறைவன் இருக்கிறான்
ஆனால் இல்லை

இல்லாதது போல் இருக்கிறான்
இருப்பது போல் இல்லாமல்!

கதாநாயக நாய்கள்

குட்டி நாய் காலைத் தூக்கி, மரத்தில் சிறுநீர் கழிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அதைப் பார்க்காதவர்கள், தற்போதைய தமிழ் சினிமாக்களைப் பாருங்கள்।

அதில் வரும் கதாநாயகன்கள் குட்டி நாய் பாணியில்தான் காலைத் தூக்கி காதல் டூயட் பாடுகிறான்கள்.

பிரசவ வலி

ரேடியோ மிர்ச்சியில் காலை நேரத்தில் நம் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றும் குரலில் ஒருத்தி பேசுவதைக் கேட்டிருக்கிறீர்களா? நம்ம சுச்சியைத்தான் சொல்கிறேன். ஏதோ சுசித்ராவாம்.

சுச்சி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அரவாணிகளிடம் கேட்டுப் பாருங்கள். சுச்சி என்றால் அரவாணிகளின் செயற்கை மார்பகம்.

இந்த சுசித்ரா பிரசவ வலியில் கதறுவது போன்ற குரலில் பேசுகிறாள். இதை எப்படித்தான் சென்னைவாசிகள் ரசிக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

அன்புடன்
எழுத்தாளர் ஒளிர்ஞர்